தமிழரசுக்கழகம்
தமிழரசுக்கழகம்
குறள் ஞானி ம.பொ.சி மாதவி பாஸ்கரன்
தமிழரசுக்கழகம்
வரலாறு படைத்த தலைவர்கள் பலர் இன்று நம்மிடையே இல்லை. ஆயினும் அவர்கள் நாட்டிற்க்கு செய்த நன்மைகளை நாம் மறக்க முடியாது, மறைக்கவும் முடியாது அவ்வாறுதான் "சிலம்புச் செல்வர்” ம.பொ.சி தமிழ் நாட்டிற்க்கு செய்த நண்மைகள், "புதிய தமிழகம்" கண்ட தலைவரல்லவா அவர்.
இந்திய விடுதலைப் போராட்டம், வடக்கெல்லை போராட்டம், தெற்கெல்லைப் போராட்டம், சென்னையை தமிழகத்தோடு இணைக்கப் போராட்டம், தமிழ்நாடு பெயர் போராட்டம், மொழிப் போராட்டம், இப்படி தன் வாழ்நாள் முழுவதும் போராட்டத்திலே ஈடுபட்டவர். தன்னலம் கருதாது பிறர் நலம் நோக்கும் பண்பாளர் ம.பொ.சி அவர்கள். இன்று சென்னை, திருத்தணி, கன்னியாகுமரி, செங்கோட்டை, நாகர்கோவில் முதலிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேரக் காரணம் சிலம்புச்செல்வர் ம.பொ.சியும் அவர் உருவாக்கிய தமிழாசுக்கழகமும் ஆகும்.
தமிழரசுக்கழகம் தொடங்கியதற்கான காரணத்தை ஐயா ம.பொ.சி அவர்கள் தனது வரலாற்று நூலான
"எனது போராட்டத்தில்" எழுதியது கீழ்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரர் "விசால ஆந்திரம்" கோரியும், கேரளர் "ஐக்கிய கேரளம்" விரும்பியும் கிளர்ச்சி நடத்தி வருவதைக்கண்டு தமிழகத்தாருக்கு இனஉணர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் எனது கற்பனையிலிருந்த "புதிய தமிழகம்" படைப்பதற்காகப் பாடுபடுவதற்குத் தனியாக ஓர் அமைப்பினைத் தோற்றுவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதனை உணர்ந்தேன். "தமிழரசு" காணும் முயற்சியில் ஈடுபட்டால் தமிழ் மக்கள் என்னைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. நான் உணர்ந்திருந்தேனென்றாலும் செயலில் ஈடுபட்டு விட்டால் அதற்குத் தேவைப்படும் ஆற்றலைத் தெய்வம் எனக்கு அளிக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். அப்போது
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
என்ற குறள் என் நினைவிற்கு வந்து செயலில் ஈடுபட என்னை ஊக்குவித்தது. பல நாட்கள் சிந்தித்துப் பார்த்தபின்னர் புதிய அரசியல் கழகமொன்றைத் தோற்றுவிப்பதென்ற முடிவுக்கு வந்தேன் என்று எழுதியுள்ளார்.
தமிழரசுக்கழகம் பிறந்தது
சிலம்புச் செல்வரின் இந்த தமிழரசுக்கழகம் இயக்கத்திற்கு அப்போதைய தமிழ் அறிஞர்கள் திரு.வி.கல்யாணசுந்தரனார், திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகியோறும் ஒத்துழைப்பு தந்தனர். இப்படிப்பட்ட சூழலில் 1946 - ஆம் ஆண்டு நவம்பர் 21 - ஆம் தேதியன்று மண்ணடி லிங்கி செட்டி தெருவிலிருந்த சிலம்புசெல்வரின் "தமிழ் முரசு" அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த தமிழரசுக்கழகம் சாதித்த சாதனைகள் எத்தனை எத்தனை.
மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரிது
என்னும் சொல்லிற்கேற்ப கழகம் சிறியதாயினும் சாதித்த காரியங்கள் பெரியதாக இருந்தது. "உண்மை இது பொய்யல்லவே"
தமிழரசுக்கழக கொடி
வெண்ணிறமும், செந்நிறமும் கலந்த கொடிதான் தமிழரசுக்கழக கொடி. இதில் மூவேந்தர்களின் சின்னங்களான வில் - புலி - மீன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கொடியின் பெருமையினை சிலம்புச்செல்வர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கழகம்
வண்ணம் முக்கியமல்ல, மூவேந்தர் சின்னங்கள்தான் முக்கியம் தேச பக்தி பாரம்பரியத்தை சேர்ந்த நான் விடுதலைப் போரில் ஆறுமுறை சிறைசென்று தியாக முத்திரை பெற்ற நான்

சுதிந்திரத் தமிழகத்திலே மூவேந்தர்களின் அரசியல் சின்னமான வில், புலி, மீன் பொறிக்கப்பட்ட கொடியை எனது கழகத்தின் கொடியக்கியது அந்நாளிலே காங்கிரசின் நெற்றிக்கண்ணைத் திறக்க வைதத்து. அதையும் சமாளித்துக் கொண்டு தமிழரசுக்கொடியை நாட்டு மக்கள் அறியும் படிச் செய்தேன்.
நமது கொடி பல போர்களங்களைக் கண்டது. வெற்றிகளையும் கண்டிருக்கிறது. புதிய தமிழகத்தைப் படைத்து வடக்கு - தெற்கு எல்லைகளை மீட்டது . தமிழை ஆட்சிமொழியக்கியது. இந்த சாதனைகள் அனைத்தும் புரிந்த சரித்திரம் மூவெந்தர் சின்னம் பொறித்த நம் கொடிக்கு உண்டு. அதையாரும் பறித்து விட முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழரசுக்கழகத்தின் கொடியின் சின்னம் மிகவும் சிறப்புடையதாகும் அதன் விவரம் கீழ் வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு ஒரு சட்டம் இருப்பது போல் ஒரு கொடியும் அனுமதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அந்தக் கொடியானது கடலோடு கப்பலையும் மூன்று சிங்கங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டதாக இருந்தது. மூன்று சிங்கங்கள் பிரிட்டிஷ் அரசாங்க சின்னமாகும். கடலோடு கப்பலும் மீன்களும் சென்னையானது கடற்கரைபட்டினம் என்பதைக் காட்டுவனவாகும்.
நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டுமென்று தமிழக அரசு ஆணை அனுப்பியது. அதுபற்றி யோசித்து பரிந்துரை தர மாநகராட்சியின் நிரந்தரக் குழுக்களின் தலைவர்கள் பிரதம என்சினியர், மாநகராட்சியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கொண்ட தனிக்குழு ஒன்று அமைக்கப்பெற்று அதில் கல்வி நிரந்தரக் குழுவின் தலைவர் என்ற முறையில் ம.பொ.சியும் இடம் பெற்றார்.

ம.பொ.சி. மூவேந்தர் மரபின் சின்னங்களான வில், புலி, மீன் சின்னங்களைத் தமிழரசுக்கழகக் கொடியில் பொறித்தவர், சென்னை மாநகராட்சிக் கொடியிலும் அந்தத் சின்னம் பொறிக்கப்பட விரும்பினார். பழைய கொடியிலேயே இரண்டு மீன்கள் இருப்பதால் புலியையும், வில்லையும் சேர்த்து மாநகராட்சிக் கொடியைத் தமிழர் கொடி ஆக்கிவிடலாம் என்று பரிந்துரைத்தார். விவாதத்திற்கு பிறகு ம.பொ.சியின் தீர்மானம் ஒருமனதுடன் நிறைவேறியது.
தனிக்குழுவின் பரிந்துரை அரசாங்கத்தின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது எதிர்பாராத வகையில் இராஜாஜியின் இல்லத்திற்கு ம.பொ.சி செல்ல அப்போது கொடி பற்றிய கோப்பைப் பார்த்துக் கொண்டிருந்த இராஜாஜி அவர்கள் ம.பொ.சியை கண்டவுடன் உங்கள் கழகக் கொடியை கார்ப்பரேசன் கொடியக்கி விட்டீர்களா ? என்று சிரித்துக் கொண்டே கூறி கோப்பில் அங்கீகாரம் தந்து கையெழுத்திட்டார் இராஜாஜி அவர்கள். இப்படிப்பட்ட வரலாற்றினை மறைக்கவும் இயலுமோ என்றால் இல்லை என்றுதான் எழுத வேண்டும்.